
இந்தப் பாடலை,மிக அருமையாகப் பாடி, அழகான படங்களுடன் இணைத்திருக்கிறார், உயர்திரு.சுப்புத்தாத்தா.. கூடவே, மிக அழகாக ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் சேர்த்திருக்கிறார். கீழ்க்கண்ட காணொளியில் கேட்டு, கண்டு மகிழுங்கள்...
திசையெட்டும் ஒளிரட்டும் தீபங்கள் பொலியட்டும்!!
திசையெட்டும் ஒளிரட்டும் தீபங்கள் பொலியட்டும்!!
தீமைகள் அகன்று நல்ல திருவருள் நிறையட்டும்!!
வாழ்வெல்லாம் வளம் தரவே வாழ்த்துக்கள் மலரட்டும்!!
வண்ணமிகு வாணங்கள் எங்கெங்கும் நிறையட்டும்!!
மத்தாப்பு வாணங்கள், மகிழ்வான நல்வாழ்த்து,
புத்தாடை, பூ வாசம், புகழ் சேர்க்கும் விருந்தோம்பல்,
சத்தான சிற்றுண்டி, சந்தோஷ சிரிப்பொலிகள்,
முத்தான நாளிதுவே மலர்மகளை வணங்கிடுவோம்!
பொன்மகளே! திருமகளே! பூவுலகின் தலைமகளே!!
பொன்னடிகள் எடுத்து வைத்து நம் இல்லம் எழுந்தருள்க!!
பொன்னொளியில் குடியிருந்து, புவி சிறக்க வரமருள்க!!
பொன்னினும் பெரிய நல் மனம் தந்து நலமருள்க!!!
பொன்னினும் பெரிய நல் மனம் தந்து நலமருள்க!!!
எந்நாளும் எம் மக்கள் சிரித்திருக்க வரமருள்க!!!
எங்கெங்கும் இன்பமயம் என்றிருக்கும் நிலையருள்க!!
இல்லையெனும் சொல் இல்லா நல்லுலகம் தனையருள்க!!
ஏற்றமிகு நல்வாழ்வு எல்லோர்க்கும் நீ அருள்க!!!
எங்கெங்கும் இன்பமயம் என்றிருக்கும் நிலையருள்க!!
இல்லையெனும் சொல் இல்லா நல்லுலகம் தனையருள்க!!
ஏற்றமிகு நல்வாழ்வு எல்லோர்க்கும் நீ அருள்க!!!
ஒளிர்கின்ற விளக்கினிலே மிளிர்கின்ற மெய்ச்சுடரே!!!
பளிங்கொத்த மனம் தந்து பவ வினைகள் தீர்த்திடுவாய்!!!
வளி போல வருந்துன்பந் தனிலிருந்து காத்தருள்வாய்!!!
தளிரொத்த திருவடிகள் பணிந்து தினம் வணங்கிடுவோம்!!!
அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!. பொங்கும் இன்பம் தங்குக எங்கும்!!!!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
