செவ்வாய், 15 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL.. PART 6, நவராத்திரி கவிதைகள்.. பகுதி 6, கும்பிடுறோம் மாரியம்மா!!!

'சக்தி ரதம்' இழுக்க வந்த ஒரு கிராமியப் பாடல்...



இந்தப் பாடலை, உயர்திரு.சுப்பு தாத்தா மிக அருமையாக, கிராமிய மெட்டில் பாடி, அவருடைய வலைப்பதிவில் வெளியிட்டிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. பாடலைக் கேட்க, கீழ்க்கண்ட  காணொளியைச்  சொடுக்கவும்..

 


 தன் வலைப்பூவிலும், இந்தப் பாடலை வெளியிட்டிருக்கிறார் தாத்தா... அந்த லிங்கைக் கீழே கொடுத்திருக்கேன்.


மாரி மாகாளி மதுர காளி அங்காளி!!
மானங் கூரையாக ஆட்சி செய்யும் வெக்காளி!!
 எந்திருச்சு வாருமம்மா எங்க மொகம் பாருமம்மா!!
கும்பிடுறோம் மாரியம்மா கொறைகள நீ தீருமம்மா!!

வேம்பே ஆடையம்மா வேல் விழியே வாருமம்மா!!
பாம்பும் குடை பிடிக்க பாக்கியவதி பாருமம்மா!!
பம்பையது ஒலிக்குதம்மா உடுக்க சத்தம் ஓங்குதம்மா!!
கம்பங் கூழ் காச்சி வச்சோம் காத்தாயி வாருமம்மா!!

தட்டுல பழங்க வச்சோம் தார் தாரா வாழ(ழை) வச்சோம்!!
தாம்பாளம் நெறைய பூவும் தங்க மஞ்சளுஞ் சேர்ந்து வச்சோம்!!
குங்குமத்துக் காரியே நீ கொலுவிருக்க வாருமம்மா!!
பொங்கலிட்டு படையலிட்டோம் புள்ளகளக் காருமம்மா!!

எலுமிச்சம் பழ மால எங்க ஊரு வெத்திலையும்!!
எட்டுக் கச புதுச் சேல வாங்கி வச்சோம் பத்தலையா?!!
ஏழ சனம் பாட வந்தோம் எங்க கொற தீருமம்மா!!
எட்டு வச்சு வாருமம்மா பொட்டழகி பாருமம்மா!!

 மொளைப்பாரி எடுத்து வந்தோம்  மான மழ பொழிய வேணும்!!
மாவிளக்கு ஏத்தி வச்சோம் மக்க பசி தீர வேணும்!!
தீச்சட்டி ஏந்தி வந்தோம் தீமைகள போக்கிடம்மா!!
பூ மிதிச்சு  வந்தோமம்மா பூச வச்சோம் ஏத்துக்கம்மா!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

13 கருத்துகள்:

  1. நவராத்திரி கவிதை அருமை..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. மலை(ழை)மகள் மாரியன்னைக்கு
    அருமையான பாமாலை சகோதரி...

    பதிலளிநீக்கு
  3. கிராமியப் பாடல் என்றால் மிகவும் ரசிப்பேன்... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. அம்மன் படமும் கிராமிய மணம் கமழும் பாடலும் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. கிராமீய மனம் தவளும் இந்த மாரியம்மன் பாடலை
    இன்று நான் பாட அருள் புரிந்த மாரியம்மன் சமயபுரம் மாரியம்மன் சரணங்களில் சமர்ப்பிக்கிறேன்.

    எனது வலையினில் இதைப் பகிர தங்கள் அனுமதியை வேண்டுகிறேன்.
    சுப்பு தாத்தா
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் தாராளமாக தங்கள் வலைப்பூவில் பிரசுரிக்கலாம். 'இதற்கு என் அனுமதி' என்றெல்லாம் தாங்கள் கேட்கத் தேவையேயில்லை. இது தாங்கள் எனக்களிக்கும் மிகப் பெரிய அங்கீகாரம். மிக்க நன்றி ஐயா!!

      நீக்கு
    2. http://www.youtube.com/watch?v=ySgxK5AfvKs
      you may listen to this also.
      subbu thatha

      நீக்கு
    3. வலை போட்டு இல்லை, இழுக்கிறாரு. பாடலும் அருமை.

      நீக்கு
    4. முதல் வருகைக்கும் சூப்பர் கருத்துரைக்கும் ரொம்ப ரொம்ப நன்றி!!!!..

      நீக்கு