அன்பர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.. வரும் ஆண்டு, நம் அனைவருக்கும் எல்லா விதத்திலும் சிறப்பானதாக அமைய வேண்டுகிறேன்..
"தப்பித்துக் கொள்ள முடியாத தெய்வீக விதியை மனம் ஒப்புக் கொண்ட பிறகுதான் புத்திசாலித்தனம் சரியான பாதையில் செலுத்தப்படுகிறது"---ஸ்வாமி ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.
புதன், 31 டிசம்பர், 2014
வெள்ளி, 14 நவம்பர், 2014
CHILDREN'S DAY SPECIAL!!!.....கொஞ்சம் ரீவைண்ட் பண்ணலாம்!!....

கீதாம்மாவோட வலைப்பதிவுல குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்னிக்கு சில கேள்விகள் தொகுப்போட 'ரிலே ரேஸ்' வெளியாகியிருக்கு... நானும் தொடரலான்னு ஒரு எண்ணம்.. அதனால..
//1. சின்ன வயதில் கண்ட Fantasy கனவு?//..
வெள்ளி, 17 அக்டோபர், 2014
VANTHACHE DEEPAVALI!....வந்தாச்சே தீபாவளி!...

ஆகவே மக்களே கொஞ்ச நாள் இடைவெளி விட்டு திரும்பவும் வந்தே ஆச்சு நான்!...தீபாவளி வந்தாச்சுல்ல.. அதான்!..
பண்டிகை பிஸி நாளைலருந்து ஆரம்பிச்சுடும்!.. அப்புறம் தீபாவளி ஆனதுக்கப்புறம் தான் இணையம் பக்கம் வர முடியும்!.. அதனால தீபாவளி பதிவு இப்பவே!..
இந்தப் பதிவுல, கொஞ்சம் கொஞ்சம் தீபாவளி டிப்ஸ் பார்க்கலாம்!..
வியாழன், 25 செப்டம்பர், 2014
ஜெய் ஸ்ரீ துர்கா...1 (நவராத்திரி முதல் நாள்).

செஞ்சுடரும் சந்திரனும் இருவிழியாய் கொண்டவளே
வஞ்சமில்லா நெஞ்சினிலே வந்துதிக்கும் உமையவளே
வெஞ்சமரில் அசுரர்களை விரட்டியடித்தருள் செய்தாய்
தஞ்சமென்று வந்து விட்டோம் தாயே நீ காத்தருள்வாய்!
வியாழன், 11 செப்டம்பர், 2014
PAATTUKKORU BARATHI!....பாட்டுக்கொரு பாரதி!...

இன்று பாரதியார் நினைவு நாள்!.. மின் தமிழ் கூகுள் குழுமத்தில் இன்று நான் எழுதிய இரங்கற்பா உங்கள் பார்வைக்காக!...
பாரதத்தாய் பலகாலம் பொறுத்துத் தவமிருந்து
வாராத மாமணியா பெத்தெடுத்த புத்திரரே!
கூரான வார்த்த கொண்டு குடி காக்க வந்தவரே!
ஊரான ஊர் பாக்க ஓடி நீயும் போனதென்ன!
வியாழன், 28 ஆகஸ்ட், 2014
SRI GANESHA ASHTOTHRA SATHA NAAMAVALI...ஸ்ரீ கணேச அஷ்டோத்திர சத நாமாவளி
ஓம் கஜானனாய நம
ஓம் கணாத்யக்ஷாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் விநாயகாய நம
ஓம் த்வைமாதுராய நம
ஓம் ஸுமுகாய நம
ஓம் ப்ரமுகாய நம
ஓம் ஸன்முகாய நம
ஓம் க்ருதினே நம
ஓம் ஜ்ஞானதீபாய நம
வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014
இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியப் பெண்களின் பங்கு.!..

இந்திய சுதந்திரப் போரில், பெண்களும் பங்கு கொண்டதை நாம் அறிவோம்.. ஆயினும், வெளியுலகத் தொடர்பு அதிகம் இல்லாதவர்கள் என்று கருதப்படும் இஸ்லாமியப் பெண்களும், இந்தப் போராட்டத்தில் மிக முக்கியமான பங்கு வகித்திருக்கிறார்கள். இவர்களது வீரமும் நாட்டுப் பற்றும் மிகவும் போற்றப்படவேண்டிய ஒன்று.
இத்தகைய வீரப் பெண்மணிகள் நால்வரைப் பற்றி, இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014
THIRUMAGAL EZHUNTHARULGA!.....திருமகள் எழுந்தருள்க!!!....

இன்று (8/8/2014) வரலக்ஷ்மி விரதம்!.
மதிமுகம் ஒளிர்ந்திட மறைகளும் துதித்திட மங்கை எழுந்தருள்க!
கதியுனை நம்பினேன் கருணையை தந்திட கமலி எழுந்தருள்க!
திங்கள், 4 ஆகஸ்ட், 2014
MUNNOOR SOTHTHU!...முன்னோர் சொத்து!.
அன்பர்களுக்கு வணக்கம்!..
இன்றைய தினம், வல்லமை இணைய இதழில், இந்த வாரத்துக்கான வல்லமையாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்காங்க திருமதி. காமாட்சி அவர்கள்.. 80 வயது கடந்து, மிக அருமையான விஷயங்களை அற்புதமாகச் சொல்லும் இவரது எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகி விட்டது..இவரது வலைப்பூவிற்கு இங்கு சொடுக்குங்கள்!.
இவரது வலைப்பூவில், 'அன்னையர் தினத்தை' ஒட்டிய இவரது பதிவுகள் யாவும் அருமை.. அது எனக்கும் என் தாத்தா, பாட்டியின் நினைவை வரவழைத்து விட்டது.. 'முன்னோர் சொத்து' என்று பெயரிட்டிருக்கிறேனில்லையா!..நம் முன்னோர் சொத்து, பணம் காசு மட்டுமல்ல.. அவர்கள் நமக்குச் சொல்லிச் சென்ற புத்திமதிகள், நடைமுறைப்படுத்திக் காட்டிய பழக்கவழக்கங்கள், தெய்வபக்தி, முக்கியமாக, நொறுங்கிப் போன சமயங்களிலும் அதீத விவேகத்துடன் மீண்டெழுந்தது, எந்தச் சமயத்திலும் தெய்வத்தைக் குற்றம் சொல்லாத பண்பு, இன்னும்..இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் அவர்கள் நமக்குத் தந்து விட்டுப் போன சொத்து தான் என்பது என் அபிப்பிராயம்..
திங்கள், 21 ஜூலை, 2014
YENTHA NAALUM POTTRIDUVEN!!......எந்த நாளும் போற்றிடுவேன்!

சொந்தமென்று வந்தவர்க்கும் சிந்தையிலே வைத்தவர்க்கும்
சந்ததமும் உந்தன் பதம் தந்தருளும் கந்த குகா!
வெள்ளி, 18 ஜூலை, 2014
PAADI UNAI THOZHUTHEN PARINTHENAKKU ARULE!..பாடி உனைத் தொழுதேன் பரிந்தெனக்கு அருளே!
ஆடி வெள்ளியில் அன்னையைப் போற்றுவோம்!
ஆடி வரும் அழகே அண்டம் நிறை ஒளியே!
கோடி வினை அறுக்கும் ஞானப் பெருங்கனலே!
பாடி உனைத் தொழுதேன் பரிந்தெனக்கு அருளே!
கண்ணின் மணி நீயே! கருணைக் கடல் நீயே!
பெண்ணின் வடிவாகி பேணும் சுடர் நீயே!
மண்ணும் விண்ணுமாகி மலரும் எழில் நீயே!
எண்ணில் உருவானாய் எந்தன் துணை நீயே!
சனி, 12 ஜூலை, 2014
THALATTU!...தாலாட்டு!!!..

எங்க குடும்பத்தில குழந்தை பிறந்தா தொட்டிலிடும் போது பாடும் பாட்டு இது.. திரு.ஐயப்பன் கிருஷ்ணன்(ஜீவ்ஸ்) அவர்கள் சொன்னதற்கிணங்க முகநூலில் பகிர்ந்து கொண்டேன்.. இங்கயும் பதிவு பண்ணலான்னு ஒரு எண்ணம்..யாராச்சும் நிசமா, தாலாட்டு பாடணுன்னு ஆசைப்பட்டா தாராளமா இந்த பாட்ட ட்ரை பண்ணுங்க..
செவ்வாய், 24 ஜூன், 2014
MINI STORIES.. SATRE GAVANIYUNGAL!......சின்னஞ்சிறு கதைகள்..சற்றே கவனியுங்கள்!!...

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!!..
இந்தப் பதிவுல, சின்னஞ்சிறு கதை ஒண்ணு பாக்கலாம்! (ரொம்ப நாளாச்சே!)....
புதன், 11 ஜூன், 2014
THIDEER VIRUNTHINARGALAI SAMALIKKA!..திடீர் விருந்தினர்களை சமாளிக்க!

போன பதிவு ரொம்ப சீரியசா ஆகிட்ட மாதிரி எனக்கே ஒரு ஃபீலிங்... அதனால இப்ப கொஞ்சம் லைட்டா பாக்கலாம்..
'வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தாலே பெரிசு'ன்னு இருக்கற காலத்துல' இப்படியொரு பதிவாங்கறீங்களா... நிஜம் தான்.. ஆனாலும் வந்தா என்ன செய்யறதுன்னு கொஞ்சம் யோசிக்கலான்னு தான்.. ஏன்னா பெரும்பாலான இல்லத்தரசிகள் வேலைக்கும் போறாங்க.. முன்னறிவிப்பில்லாம 'திடும் திடும்'னு வந்து நிக்கற விருந்தாளிகள சமாளிக்கறது நிஜமாவே கொஞ்சம் திணறலான வேலை தான்!..ஆனா, முடியும்னு நினைச்சா, முறையா திட்டமிட்டு வேலை செஞ்சா எதையும் சமாளிக்கலாம் தானே!
ஞாயிறு, 25 மே, 2014
THANTHAIKULAMEE.. ORU SALUTE UNGALUKKU!..தந்தைக்குலமே... ஒரு சல்யூட் உங்களுக்கு!..
ஆகவே மக்களே!.. கோடை விடுமுறை முடிச்சு நான் வந்தே ஆச்!..கொளுத்துகிற வெயிலும் கொஞ்சம் மழையுமாய் மதுரை மதுரமா இருந்தது எப்பவும் போல.. மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் தரிசனம் எல்லாம் திவ்யமாய் ஆச்சு!..
எப்பவும் போல ஊர் மக்கள், 'எப்படி இருக்கே?.. எப்ப வந்தே?..இளைச்சு(???)ப் போய்ட்டியே (இது..இது...இதனால தான் எனக்கு மதுரை எப்பவுமே பிடிக்கும்!!), இப்படியாப்பட்ட விசாரிப்புகள், உபசரணைகள் அப்படின்னு ரொம்ப சந்தோஷமாப் போச்சு விடுமுறை!..
இந்த விடுமுறைல நான் பார்த்த, என்னைப் பாதித்த விஷயங்கள் நிறைய.. ஒண்ணொண்ணாப் பகிர்ந்துக்கறேன்..
முதல்ல இன்னைக்குத் தேதிக்கு சிந்தனைப் போக்குல வந்திருக்கற ஒரு மாற்றம்!.. இது என்னை ரொம்பவே யோசிக்க வச்சதால முதல்ல வருது..
புதன், 16 ஏப்ரல், 2014
EESANADI POTTRI.. ஈசனடி போற்றி!

கண்டங் கறுத்தான் கவினுருவாய் உளம் நிறைந்து
நின்றருளுந் தோற்றம் நிலையாக மனம் வைப்போம்!
தண்ணிலவு தனைச்சூடி வெண்ணீறு தனிலாடி
பொய்யறுத்தார் நெஞ்சகத்தில் புனலாக அருள்சுரப்பான்
அண்ணாமலையான் அனலோடு புனல் ஏந்தி
பெண்ணை ஒருபாகம் கொண்டருளும் பேரொளியான்!
விண்ணாகி மண்ணாகி விரிந்திருப்பான் பொன்னடிகள்
கண்ணுள்ளே வைத்து கசிந்துருகிப் போற்றிடுவோம்!
எங்கும் நிறைந்திருப்பான் எம் ஐயன் பொழி கருணை
தங்கும் அடியவர் தம் தாள் பணிந்து வணங்கிடுவோம்!
பொங்கும் கங்கையினை சடை ஏந்தும் பொன்னவனை
சங்கம் முழங்கிடவே தாள் பணிந்து வணங்கிடுவோம்!
மின் தமிழ் குழுமத்தில், தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, 'சித்திரை ரத'த்துக்காக எழுதி வெளியாகிய கவிதை!..
நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.
ஞாயிறு, 13 ஏப்ரல், 2014
THIRUVE VARUGA!...திருவே வருக!..

ஸ்ரீலக்ஷ்மி தேவியே திருவருள் புரிக!
ஸ்ரீஜய ஆண்டிலே வளமெல்லாம் தருக!
புதன், 2 ஏப்ரல், 2014
ANNAIYE ARUL POZHIYA VAA!...அன்னையே அருள் பொழிய வா!..
அன்னையருள் பொங்கி வரும் அன்பதிலே தங்கி வரும்.
மன்னுயிர்கள் ஈன்றெடுத்து வாழ வைக்கும் பதம் அருளும்
வியாழன், 20 மார்ச், 2014
SUTTRULA POREENGALAA.?!!!....சுற்றுலா போறீங்களா?!!!!..

வணக்கம் அன்பு நண்பர்களே!....
எல்லாரும் நலமா இருப்பீங்கன்னு நினைக்கறேன்.. பசங்களுக்குப் பரீட்சையெல்லாம் முடிஞ்சிருக்கும்.. சிலருக்கு இன்னும் ஒரு வாரத்தில் முடியலாம்..
லீவுக்கு எங்காவது சுற்றுலா போக ப்ளான் வச்சிருக்கீங்க தானே...
எங்கெங்கே போகணும்.. எப்படிப் போகணுங்கறதெல்லாம் ப்ளான் பண்ணிட்டீங்களா.. இல்லன்னா இப்பவே ஸ்டார்ட் பண்ணுங்க.. என்னாலான டிப்ஸ் இதோ..
1. தனிப்பட்ட முறையில் செல்வதென்றால்,
ஞாயிறு, 9 மார்ச், 2014
சனி, 8 மார்ச், 2014
திங்கள், 3 மார்ச், 2014
சனி, 22 பிப்ரவரி, 2014
AMMIYE.. ARPUTHAME!...அம்மியே!! அற்புதமே!!..
தலைப்பைப் பார்த்ததும், 'அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து'ன்னல்லாம் எழுதுவேன்னு ஐடியா பண்ணீங்கன்னா அதுக்கும் ஸாரி!.. இது வேற..
சமீபத்துல ஒரு வீட்டு கிரஹப்பிரவேசம் போயிருந்தேன்.. அட்டகாசமா, மாடுலர் கிச்சனெல்லாம் செட் பண்ணி வீடு சூப்பரா இருந்துது!.. வேடிக்கை பாத்துட்டே நின்னேனா!.. அப்படியே கண்ணு ஒரு பொருள விட்டு நகரவேயில்ல.. அது ஒரு அழகான, குட்டி அம்மி..
திங்கள், 27 ஜனவரி, 2014
MINI STORIES... MUTHTHAARAM...சின்னஞ்சிறு கதைகள்.. முத்தாரம்!!!!!....

அவள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்த அந்தப் பொருள்... ஒரு முத்து நெக்லஸ்.. அந்தக் கடையில், கண்ணாடிச் சட்டமிட்ட அலமாரிக்குள்ளிருந்து அவளை ஈர்த்தது அது.. அழகாக ஒரு பிங்க் நிற அட்டைப் பெட்டியில், கரு நீல நிற வெல்வெட் பொதிக்குள் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த அந்த முத்து நெக்லஸ் ஒரிஜினல் முத்துக்களால் ஆனதல்ல... ஆனாலும் பார்ப்பவர்களை அதன் பளபளப்பு கவர்ந்திழுத்தது.... அந்தப் பல்பொருள் அங்காடியில், இது போல் பலப்பல முத்தாரங்கள்.. ஆனாலும் அந்த முத்து நெக்லஸை ஆனிக்கு மிகவும் பிடித்து விட்டது!!..
திங்கள், 13 ஜனவரி, 2014
PONGAL THIRUNAAL SIRAPPU KAVAITHAI..ஞாயிறு போற்றுதும்!..ஞாயிறு போற்றுதும்!!

இந்தப் பாடலை, திரு.சுப்புத் தாத்தா மிக அருமையாகப் பாடி அளித்திருக்கிறார். அவருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி!!..
ஒளி தந்து இருள்நீக்கி நலம் தந்து வளம் சேர்க்கும்
ஒப்பிலா கதிரவனை வணங்குவோம்!
மழை தந்து மண்ணுலகம் மகிழ்வித்து அருள் செய்யும்
பர்ஜன்யன் உன்னடியைப் போற்றுவோம்!
வானவரைக் காத்தருளும் இந்திரனின் திருவுருவே
வாழ்த்தினோம் வாழ்த்தினோம் அருள்கவே!
வயல்களில் விதைத்ததை விளைவிக்கும் பூஷாவே
வான்மணியே உனைத் தொழுதோம் வருகவே!
மூச்சிலே வரும் காற்று உன்னருட் செயலன்றோ
முழுமுதலே அர்யமான்!! வணங்கினோம்!
மூலிகைகள் உள்ளாடும் சக்தியாய் நோய் தீர்க்கும்
த்வஷ்டா உன் தாளிணைகள் போற்றினோம்!
பகன் என்ற பெயர் கொண்டு நீ தரும் வெம்மையால்
பாரிலே மன்னுயிர்கள் வாழுமே!
ஜடராக்னி ரூபத்தில் உயிர்க்குலம் காத்தருளும்
விவஸ்வானின் திருநாமம் போற்றினோம்!
வாயுக்கள் வடிவான வளம் தரும் அம்சுமான்
வள்ளலே!..உன்னடியை வணங்கினோம்!
எண்ணத்தில் தீமை தனை எரித்திடும் சக்தியே
எமைக் காக்கும் விஷ்ணுவே அருள்கவே!
இவ்வுலகம் படைத்தருளும் என் தேவே தாதாவெ
இகலோகம் வாழ நலம் தருகவே!
நீர் வடிவில் உயிர்க்குதவும் வருணனே வாழ்த்தினேன்
நீர் வளம் நிறைய அருள் பொழிகுவாய்!
நிலையாக மன்னுயிர்கள் வாழவே தவம் புரியும்
நிலவுலக மித்திரா வளம் வழங்குவாய்!
ஆதித்ய தேவா நல்லறம் வளர்க்கும் பகலவா
ஆருயிர்கள் காக்கும் எழில் ஞாயிறே!
அன்பான சூரியனே பண்பாளர் உளம் இருந்து
அகலாமல் வாழ்விக்க வரமருள்!
=====
இந்தப் பாடல், த்வாதச ஆதித்யர்கள் என்று போற்றப்படும் சூரியனின் பன்னிரண்டு திருநாமங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது…சூரியனே அனைத்துத் தேவர்களின் திருவுருவங்கொண்டு உலகைக் காக்கிறான் என்கிறது ‘பவிஷ்ய புராணம்’. பவிஷ்ய புராணத்தில், ஸ்ரீகிருஷ்ணர், தமது புதல்வன் சாம்பனுக்குச் சொல்வதாக வருகிறது இது.
இதன்படி, சூரிய பகவானே, ‘த்வாதச (பன்னிரெண்டு) ஆதித்யர்க’ளாக, பன்னிரெண்டு வடிவங்களை எடுத்துக் கொண்டு, பன்னிரெண்டு வகையான செயல்களைப் புரிகிறார். த்வாதச ஆதித்யர்கள் பின்வருமாறு.
1. தேவர்களைக் காக்கும் இந்திரன். மேகத்தைக் கட்டுப்படுத்துபவர் சூரியபகவான். சிம்ம மாதமாகிய ஆவணி மாதச் சூரியனின் திருநாமமே இந்திரன்.
2. படைக்கும் தொழிலைச் செய்யும் தாதா. இந்த திருநாமம் கொண்ட சூரியன், உயிர்களின் தோற்றத்திற்குக் காரணமான வெம்மையைத் தருபவர். மாதங்களில், இவர் சித்திரை மாதத்திற்கு உரியவராகக் கருதப்படுகிறார்.
3. உலகத்தில் மழையைப் பொழிவிக்கும் பர்ஜன்யன். நீர் நிலைகளில் இருக்கும் நீரை அமுதமென அள்ளி மேகமாக்கித் தருபவர் இவரே!. இவர் பங்குனி மாதத்துக்கு உரியவராகக் கருதப்படுகிறார்.
4. உணவுப்பொருள்களை விளைவித்து அருளும் பூஷா.விதைத்த விதைகள், பூமியில் முளைக்கத் தேவையான அளவு வெப்பத்தை அளிப்பவர் பூஷா. மாசிமாதச் சூரியனே பூஷா.
5. மூலிகைகளின் சக்தியாக இருந்து நோய்களைப் போக்கும் துவஷ்டா. இவர் ஐப்பசி மாதத்திற்கு உரியவராகக் கருதப்படுகிறார். அடைமழை மாதமான ஐப்பசியில், நோய் நொடிகள் அண்டாதிருக்க அருளுபவர் இவரே.
6. மூச்சுக்காற்றை அளித்து உயிர்களை இயங்கச் செய்யும் அர்யமான். ‘வைகாசி வாய் திறக்கும்’ என்று தொடங்கி, வீசும் காற்றின் அளவைக் குறித்துச் சொல்லப்படும் பழமொழிகளை நாம் அறிவோம். மிதமான காற்றுக்குத் தலைவன் அர்யமான். வைகாசி மாதச் சூரியனின் திருநாமம் இதுவே.
7. உயிர்களுக்கு நலம் வழங்கும் பகன். உயிரினங்களின் உடலில் உயிர் தங்கியிருக்க வெம்மை தேவைப்படுகிறது. இந்த வெம்மை இல்லாவிட்டால் உடல் குளிர்ந்துவிடும். அத்தகைய வெம்மையைத் தரும் பகலவனின் திருநாமமே இது. மாதங்களில் இவர் தைமாதச் சூரியனாக அறியப்படுகிறார்.
8. உயிர்களிடத்தில் ஜடராக்னி ரூபத்தில் இருந்து, உண்ணும் உணவின் ஜீரண சக்திக்கும், உடல் வெப்பம் சீராக இருக்கவும் உதவும் விவஸ்வான். எல்லா வகையான அக்னிக்கும் ஆதாரம் இவரே. மாதங்களில் இவர் புரட்டாசி மாதத்துக்குரியவராகக் கருதப்படுகிறார்.
9. தீய எண்ணங்களையும் தீய சக்திகளையும் அழிக்கும் விஷ்ணு. பரம்பொருளின் எங்கும் நிறைத் தன்மையே விஷ்ணு. பகலவனின் பிரகாசம் போல் தீப ஒளி நிறையும் கார்த்திகை மாதத்திற்கான சூரியனே விஷ்ணு என்று அறியப்படுகிறார்.
10. வாயுக்களின் வடிவிலிருந்து உயிர்களுக்கு உதவும் அம்சுமான். இதமான வெப்பம் தருபவரே அம்சுமான். பனி நிறைந்த மார்கழி மாதத்திற்கான சூரியனே அம்சுமான்.
11. நீர் வடிவிலிருந்து உயிர்களுக்கு உதவும் வருணன். ஆடியில் வீசும் பெருங்காற்றுக்கு அதிபதி இவரே. ஆகவே ஆடி மாதச் சூரியனே வருணன் என்று அறியப்படுகிறார்.
12. உயிர்களின் நலனுக்காக, சந்திரபாகா நதிக்கரையில் தவமியற்றும் மித்திரன். கடலரசனின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தி உயிர்களுக்கு உற்ற தோழனாக விளங்குபவர். சந்திரபகவான் இவராலேயே ஒளி பெறுகிறார். மாதங்களில், ஆனி மாதச் சூரியனே மித்ரன் என்று புகழப்படுகிறார்.
ஞாயிறு போற்றுதும்!..ஞாயிறு போற்றுதும்!!
அன்பர்களுக்கு மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!
வல்லமை மின்னிதழின், பொங்கல் சிறப்பிதழில் வெளியான கவிதை:
நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி : கூகுள் படங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)